புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால் நடவடிக்கை – கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் கீழ் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி ரூ.7 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், 8 வடிவிலான நடைபயிற்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர் மல்லிகா, ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொது இடங்களிலும், மதுபான விடுதி, சொகுசு விடுதிகளிலும் தடை...









