செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் தேர்வு!

நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் தேர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் பதவி ஏற்றுள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வென்று இருந்தனர். தற்போதுபஞ்சாயத்து போர்டு, வார்டு கவுன்சிலர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்று வருகின்றனர். இந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் மேயர் ஆகப் பதவி ஏற்றுள்ளார். இவர் பி.எஸ்சி கணிதம் முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எஸ்.எஃப்.ஐ உறுப்பினராகவும் தலைவராகவும் எனப் பல பதவிகள் வகித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே இவர் தேர்தலை வென்றுள்ளார்....
திருப்பதி கோயிலில் இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை  திறந்தே வைக்கப்பட உள்ள சொர்க்கவாசல்

திருப்பதி கோயிலில் இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை திறந்தே வைக்கப்பட உள்ள சொர்க்கவாசல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்கவாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. வைக்குண்ட ஏகதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஆனால், வரலாற்றிலேயே இதுவரையில் இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்க வாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. உள்ளூர் பொதுமக்களுக்கு தரிசனம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன் என்ற கணக்கில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் இந்த 10 நாட்கள் விசேஷ வழிபாடு இலவசமாகவே வழங்கப்பட உள்ளது. இதற்காக உள்ளூர் மக்கள் திருப்பதி கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். டோக்கன் விநியோகத்துக்காக ஐந்து சிறப்பு கவுன்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் சொர்க்கவாசல் திறந்தே வைத்திருக்கப்படும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட...
விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் “மாஸ்டர்”

விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் “மாஸ்டர்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யின் முதல் பேன் இந்தியா படமாக மாறும் "மாஸ்டர்" மாஸ்டர் படத்தை நம்பி தான் மொத்த இந்திய சினிமாவே இருக்கிறது என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. மாஸ்டர் படத்தின் இந்திய வெளியீட்டை பார்த்துவிட்டு தான் மற்ற நடிகர்களும் தங்களது படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.இதில் பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் படங்களும் அடங்கும். இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் தற்போது இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். சமீபத்தில்தான் மாஸ்டர் படம் தமிழில் யுஏ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது ஹிந்தி டப்பிங்கும் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக...
மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்… வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக்

மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்… வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்... வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா.  அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லலித் குமார் தயாரித்துள்ளார். கோப்ரா படத்துக்காக விக்ரம் முழுமையாக தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். இதில் 15 தோற்றங்களில் அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கிறிஸ்துமஸ் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது....
புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ – பா. இரஞ்சித்

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ – பா. இரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா. இரஞ்சித் ...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்… சினிமா பிரபலங்களும்…

HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும்... சினிமா பிரபலங்களும்... கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சினிமா நடிகைகள் பலரும் கிறிஸ்துமஸ் விழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். சில நடிகைகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கருப்பொருளில் உடை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடி அந்த படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷாலு‌ஷம்மு. இரண்டாம் குத்து படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறினார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பச்சை நிற கிளிட்டர் உடை அணிந்து தலையில் சாண்டா தொப்பி மாட்டிக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். சிவாவுடன் ‘தமிழ்ப் படம்-2’ ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாமேனன். இவர் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்ததோடு தனது செல்ல பிராணிக்கும் சாண்டா...
ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ நிர்வாகம்

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது – அப்பல்லோ நிர்வாகம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளது...
தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் ‘பகவான்’..!

தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் ‘பகவான்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆரி அர்ஜுனன் நடிப்பில் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் 'பகவான்'..! அம்மன்யா மூவிஸ் சார்பில் மஞ்சுநாதா தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவி பிக் பாஸ் இல் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் 11 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் காளிங்கன். ஒளிப்பதிவு முருகன் சரவணன். எடிட்டிங் பணிகளை அதுல் விஜய் கவனிக்க பிரசன் பாலா இசையமைக்கிறார். இப்படத்தில் சண்டை பயிற்சியாளராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் 80% முடிவடைந...
நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து தொடங்கிய புதிய பிசினஸ்!

நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து தொடங்கிய புதிய பிசினஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேனிலவுக்குச் சென்ற காஜல் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இ...
பத்திரிகையாளர்  கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்! 

பத்திரிகையாளர்  கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பத்திரிகையாளர்  கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்! பத்திரிகை நண்பர்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட காலமாக உங்களில் ஒருவனாக பயணித்த நான் (கோடங்கி ஆபிரகாம்)  இப்போது அடுத்த நகர்வாக உருவாக்கியுள்ள குறும்படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'ருச்சி சினிமாஸ்' & 'பாஸ்ட் மெஸெஞ்சர்' இணைந்து வழங்கும் பெயரிடப்படாத "Short Film No. 1"  குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று  வெளியாகிறது. சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை. நடிப்பு கலைஞர்கள்: கதை நாயகி - கயல்விழி, ஜோயல் பென்னட், 'திடீர் தளபதி' சதீஷ்முத்து, ஹிதயத்துல்லா, 'ஒற்றன்' துரை தயாரிப்பு நிறுவனம்: ருச்சி சினிம...