அதிமுக ஊழல் லிஸ்ட் போடும் உதயநிதி!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கையும், அதிமுக ஆ.ராசாவின் 2ஜி வழக்கையும் பற்றி தொடர்ந்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று தன் மீது ஊழல் புகார் இல்லை என ஆ.ராசா விளக்கமளித்ததுடன், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிலையில், அதிமுகவினர் திமுகவின் ஊழல்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “முட்டை ஊழல் - குட்கா ஊழல் - நெடுஞ்சாலை ஊழல் - டெண்டர் ஊழல் - போலி நிறுவன ஊழல் - மணல் குவாரி ஊழல்- மின்சார கொள்முதல் ஊழல்- ஆவின் ஊழல் - நெல் கொள்முதல் ஊழல் - கொரோனாவிலும் ஊழல்... என சத்துணவ...









