ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்!
ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்!
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் முன்னதாகவே நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரிய அளவில் தாக்கம் இல்லை.
ஆனால், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைய ஆரம்பித்தது. இது உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதில் டெல்டா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் டெல்டா வைரசால் 2-வது அலை உருவாகி அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது.
டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக தேவைப்பட்டது. இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி, சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் டெல்டா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட 2-வது அலையை இந்தியா கட்டுப்படுத்தியது. தற்போது இந்தியாவில் ...









