20 மாநிலங்களில் பாஜக ஆட்சி – 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்: மோடி பெருமிதம்
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் இன்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
தனது தலைமையிலான நான்கு ஆண்டு ஆட்சி பற்றி பிரதமர் மோடி பேசியதாவது :-
நாட்டின் 125 கோடி மக்களை வாழ்த்தி ஜகன்நாதரின் பூமியில் இருந்து பேசுவது எனது கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த இடம் இது. மக்களின் கனவுகள் மற்றும் அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை தொடர்ந்து பணியாற்ற தூண்டுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள பலரும் ஏழ்மையில் வாழ்ந்தவர்கள். அதனால் தான் ஏழைகளின் நலனுக்கு இந்த அரசு அதிக முக்கியத்து...









