ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன்
ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன்
கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை அண்ணா சிலை அருகே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
நேற்று 2-வது நாள் போராட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுவை கவர்னர் கிரண்பேடி மக்களுக்கு எதிராக உள்ளார். அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், அரசாணை பிறப்பித்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். நாட்டுக்கு கவர்னர் பதவியே தேவையில்லை என்பதுதான் இங்குள்ள அனைவரின் கருத்து. இந்தியா முழுவதும் அந்த பதவியை காலி செய்யவேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-...









