மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கும் நடிகர் விஷால்…
வீரியத்துடன் மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கும் நடிகர் விஷால்...
நடிகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பல வெற்றிகளை குவித்த நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர் மன்றத்தை “விஷால் நற்பணி இயக்கமாக” 2015 ஆம் ஆண்டு மாற்றி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை எந்த ஒரு எதிர்ப்பர்பின்றி செய்தார் என்பது நாம் அறிந்தது தான். நற்பணி இயக்கமாக களம் கண்ட தன் அமைப்பை “விஷால் மக்கள் நல இயக்கமாக “ 2018 ஆம் ஆண்டு உருமாற்றி இன்னும் வீரியமாக மக்கள் நலப்பணியில் தன் ரசிகர்களோடு கரம் கோர்த்து மக்கள் நல பணியில் ஈடுப்பட்டார்.
இதனிடையே மற்ற நடிகர்களை போல் நேரடியாக சினிமாவிலிருந்து அரசியல் என்ற அணுகுமுறையை கையில் எடுக்காமல் தான் சார்ந்த சினிமா துறையில் நடந்த பல ஊழல்கள், பிரச்சனைகள் போன்றவற்றை கலைவது என முடிவெடுத்து துணிச்சலாக அத்துறை பிரச்சனைகளை கேள்விகளாக முன் வைத்து அதற்கு அன்று இருந்த நிர்வாகம் செவி சாய்க்...









