திருப்பதி கோயில் ஊழியர் பக்தருக்கு அனுப்பிய ஆபாச வீடியோ!
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பிரத்யேகமாக டிவி சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. இதில் 11 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளும், 4 மணி நேரம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக 90 ஊழியர்கள் போதும் என்று கூறப்படும் நிலையில், தற்போது 248 பேர் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 150 பேர் எந்தவித வேலையும் செய்யாமல் வெறுமனே சம்பளம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் தொடர்பான பக்தி நிகழ்ச்சி ஒன்றை அனுப்புமாறு SVBC சேனலிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இ-மெயில் மூலம் லிங்க் ஒன்று பக்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந...









