தமிழ் ராக்கர்ஸ் பட ரிலீஸ் தேதி வெளியிட்ட `தமிழ்படம் 2.0′ கலாட்டா..!
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது.
இந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்ப இருக்கிறது. அதற்கான பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 11-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாகவும், வருகிற 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே 26.05.2018 ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அத...








