இயக்குனர் A வெங்கடேஷின் நேத்ரா இசை கனடாவில் நாளை வெளியீடு..!
கனடாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இயக்குனர் A.வெங்கடேஷ்ன் "நேத்ரா"
22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’.
இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.
லைன் புரொட்யூசர் - குமரவேல் பாண்டியன்.
ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே அது கமர்ஷியல் ஹிட்டுதான். தயாரிப்பாளர்களை மகிழ்வித்து மகிழும் இயக்குநர்களை கோடம்பாக்கத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வரிசையில் A.வெங்கடேஷ்...









