‘நான் கடவுள்’ நேரத்தில் அஜித்தும் அசோக்குமார் மனநிலையில் இருந்தார்: இயக்குநர் சுசீந்திரன் தகவல்
நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்புசெழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்திருக்கிறார்.
திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை குறித்து பைனான்சியர் அன்புசெழியனை கடுமையாக குற்றச்சாட்டி இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில...









