ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் டப்பிங் பணியை முடித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 26-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கின்றனர்
டி.இமான் இ...
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இரும்புத்திரை'. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், சமந்தா, இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விஷால் பேசும் போது,
`இரும்புத்திரை' முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை கட்டாயம். அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பலர் வேண்டிக் கொண்டனர். அதில் இயக்குநர் மித்ரனும் ஓருவர். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மித்...
‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று நடந்துள்ளது. படப்பிடிப்பை முடிந்ததையொட்டி படக்குழுவினருடன் விஷால், சமந்தா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயா...
திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார்.
திரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘புரட்சி தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர்.
மும்பையை சேர்ந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்காக ஒரு வருடத்துக்கு மேலாக ஜெயலலிதா பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து, இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியதாவது:-
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம் இதுபற்றி தெரிவித்தோம். ஆனால் அவர் இதுகுறித்து பிறகு பேசலாம் என்று சொன்னார்.
‘புரட்சி தலைவி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை பற்றிய படப்பிடிப்பு சென்னையில் படமாகு...
தாதா 87 (DHA DHA 87) திரைப்படத்தில் ‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகர் பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் VIJAY SRI G எழுதியுள்ளார், இசையமைப்பாளர் LEANDER இசையமைக்க, RAJAPANDI ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாருஹாசன், சரோஜா(கீர்த்திசுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் தாதா 87 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை காசிமேட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2018ல் படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் ‘கலை சினிமாஸ்’ முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று படத்தின் 1 ST SINGLE TRACK ஆறடி ஆண்டவன் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது....
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க...
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்ற ஆண்டு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவா சென்றிருந்தார். அப்போது மர்ம கோவா பகுதியில் மக்களிடையே பேசும் போது, மாசற்ற கோவாவை தன் தாயார் சோனியா காந்தி மிகவும் விரும்புவதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்த சோனியா காந்தி கடந்த 16-ம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், சோனியா கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார்.
தனது நெருங்கிய நண்பர்களுடன் கடந்த 26-ம் தேதி கோவா சென்ற இவர் புத்தாண்டு கொண்டாடிய பிறகு வீடு திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு கோவாவில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது....
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டி.டி.வி தினகரன் இன்று காலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவரை சந்தித்து விட்டு சிறை வளாகத்தில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன், வாங்கிவிட்டேன். எதிர்கால திட்டங்களை எடுத்து கூறினேன், அனுமதி அளித்தார். ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சிறையில் சசிகலா மவுனவிரதம் இருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை, பொய் பிரசாரம் செய்கிறார்கள். மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி, அதிகாரம் இருப்பதால் நீடிக்கிறார்கள். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க பொதுச்செயலாளருக்கே அதிகாரம் இருக்கிறது.
எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக...