ஜெயலலிதா பிறந்த நாளன்று ஆர்.கே.நகரில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் EPS உறுதி
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரச்சாரம் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று அவர்கள் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.
பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் என்றும், தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோது இந்த தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்.
‘இந்த தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவோம். ஆளும் அ.தி.மு.க. ஜெயித்தால் தான் ஆர்.கே.நகர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆர...









