தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை.
ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது.
இந்த படத்தின் ஆடியோவை மலேசியாவில் வெளியிட்டார்கள்.
மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங...









