புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது இலங்கை சுப்ரீம் கோர்ட்  அதிரடி..!

பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் உள்பட 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளன.  இந்நிலையில், இந்த வ...
திகில் காமெடி கலந்த ஜாம்பி ஷூட்டிங் ஸ்டார்ட்… கிளாப் அடிச்சது இயக்குனர் பொன்ராம்!

திகில் காமெடி கலந்த ஜாம்பி ஷூட்டிங் ஸ்டார்ட்… கிளாப் அடிச்சது இயக்குனர் பொன்ராம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'ஜாம்பி' படப்பிடிப்பை  'க்ளாப்' அடித்து துவக்கி வைத்த பிரபல இயக்குநர் பொன்ராம் 'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் புவன் நல்லான் R. இவரின் அடுத்த படமும் திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான். உலகப்புகழ் பெற்ற 'ஜாம்பி' கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். 'ஜாம்பி' என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை 'எஸ்3' பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் V.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள். யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோபி சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள். இசை - பிரேம்ஜி, ஒளிப்பத...
ஆடம்பரமாக நடந்த இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம்..!

ஆடம்பரமாக நடந்த இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் நடந்தது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்தது. மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்தது. பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி இருந்தன. இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு ரூ.3 லட்சம் என்றும், ரூ.722 கோடிக்கும் மேல் திருமண செலவு என்றும் கூறப்பட்ட நிலையில் வெகு ஆடம்பரத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.  திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ...
இசையராஜா-75 நிகழ்ச்சிக்காக 2 நாள் படப்பிடிப்புக்கு விடுமுறை

இசையராஜா-75 நிகழ்ச்சிக்காக 2 நாள் படப்பிடிப்புக்கு விடுமுறை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 5-முறை தேசிய விருதுகளை பெற்று  500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும்  திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் பிரம்மாண்டமான இசைவிழாவை  நடத்த இருக்கிறார்கள் 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைவிழாவை  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.எனவே பிப்ரவரி 2-3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்ப...
செல்வாக்கு சரிந்து போனதை 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.,வுக்கு உணர்த்துகிறது – ரஜினி

செல்வாக்கு சரிந்து போனதை 5 மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.,வுக்கு உணர்த்துகிறது – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த்-ஐ சந்தித்த செய்தியாளர்கள்  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவரது கருத்தை அறிய முயன்றனர். அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதை காட்டுவதாக தெரிவித்தார். இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்....
அரசு குறிப்பிடும் விலைக்கு மேல் சினிமா டிக்கெட் விலை விற்கப்பட்டால் நானே சென்று அடிப்பேன் – மன்சூர் அலிகான் ஆவேசம்

அரசு குறிப்பிடும் விலைக்கு மேல் சினிமா டிக்கெட் விலை விற்கப்பட்டால் நானே சென்று அடிப்பேன் – மன்சூர் அலிகான் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'உன் காதல் இருந்தால்' படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.  லெனா (நடிகை) ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் தற்போது விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றேன். மபுள் சல்மான் (மற்றொரு கதாநாயகன்) தமிழ் கொஞ்சம் தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்கள் நடித்திருக்கிறேன். தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். எனக்கும் என் பெரியப்பா மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் மாதிரி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன். அப்போது தான் ஆசிப் இந்த வாய்ப்பை கொடுத்தார். தமிழில் முதல் படம். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ...
விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் – லண்டன் சட்ட நிறுவனம் கருத்து

விஜய் மல்லையாவை நாடு கடத்த பல மாதங்கள் ஆகலாம் – லண்டன் சட்ட நிறுவனம் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு பற்றி லண்டன் நகரில் உள்ள ஜைவாலா என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சாரோஷ் ஜைவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. எனினும் அதுவரை அவரை கைது செய்ய முடியாது. அவர் தொடர்ந்து ஜாமீனிலேயே இருப்பார். ஐகோர்ட்டு உத்தரவு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தாலும் கூட அவரால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அப்போது இந்த வழக்கு விசாரணை மேலும் 6 மாதங்கள் வரை நீடிக்கும். எனவே விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு மேலும் பல மாதங்கள் வரை ஆகலாம்” என்றார். இந்தநிலையில் தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மேல் முறையீடு செய்வார் என்று கூறப்படுகிறது....
கனா படத்தில் முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன்..!

கனா படத்தில் முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'கனா' அதன் பாடல்கள் மற்றும் காட்சி விளம்பரங்களின் மூலமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. குறிப்பாக, சிவகார்த்திகேயன் ஒரு புதிய தோற்றத்தில் திரையில் தோன்றியது, அதன் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரோ என்ற சில அனுமானங்கள் உண்டு, ஆனால் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அந்த விஷயங்களை பற்றி கூறி, நம்மை ஆச்சரியப்படுகிறார். சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது தான் உண்மை. சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். என் இயக்குனர் 'கனா'வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப்பாளர் என்...
உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

உர்ஜித் படேல் ராஜினாமா; அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் – ரகுராம் ராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரிசர்வ் வங்கி கவனர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் நிலவி வந்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், உர்ஜித் படேல் ராஜினாமா எதிர்ப்பை பதிவு செய்வதாகும். ராஜினாமா பற்றி அனைத்து இந்தியர்களும் கவலைப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அருண் ஜெட்லி மத்திய வங்கியை விமர்சனம் செய்த நிலையில் உர்ஜித் படேல் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.பி.ஐ. கவர்னர் உஜ்ஜிதே படேல் பதவி விலகல் பெரும் கவலைக்குரிய விஷயமாகும். அரசு அதிகாரி தன்னுடைய ராஜினாமாவை அறிவிப்பது என்பது எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயமாகும். அவர்கள் தீர்க்க முடியாத சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் நிலையில் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஓவியா நடித்துள்ளார்கள். மேலும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பெற்றிருக்கிறார்.  https://twitter.com/Udhaystalin/status/1072123302687072256 அன்றைய தினத்தில் ‘அடங்க மறு’, ‘சீதக்காதி’, ‘மாரி 2’, ‘கனா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது....