அஜித் கால்ஷீட் வாங்கவே சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்..!
நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள். இவருக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள். அதுபோல் இயக்குனர் சுசீந்திரனும் அஜித் சார் எனக்கு உதவினார் என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்தார்.
அதில், “நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு 3 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம்.
அப்பொழுதுதான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜித் சாரை சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக...









