அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல் முதலில் தாமரை… இப்போது பாபா முத்திரை..! உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்
அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல்
முதலில் தாமரை... இப்போது பாபா முத்திரை..!
உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்
அரசியல் அறிவிப்பை தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு பல இடங்களில் இருந்து ஆதரவும், சில இடங்களில் இருந்து எதிர்ப்பும் அரசியல் தலைவர்களிடத்தில் இருந்து எழுந்துள்ளது.
ரசிகர்கள் மட்டத்திலும் ஒரு மித்த கருத்து எதுவும் இன்னமும் உருவாகவில்லை. அதிலும், அரசியல் அறிவிப்பு செய்த நாளில் இருந்தே ரஜினிகாந்த் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
ரசிகர்கள் சந்திப்பின்போது எப்போதுமே ரஜினியின் மேடை அலங்காரத்தில் பாபா முத்திரை வெண் தாமரையின் பின் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வகையில் இருக்கும்.
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு செய்வதற்கு முன்பு ரசிகர்களை சந்திக்கும்போதெல்லாம் என்ன பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. அவர் காட்டுகிற அல்லது பேசுகிற விஷயங்களும் பெரும்பாலும் அரசியல்வாதிகளா...









