செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

HOME SLIDER

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா இன்று சசிகலா விடுதலை!

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்ததால் சசிகலா இன்று சசிகலா விடுதலை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைகிறது - சசிகலா இன்று விடுதலை சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார். கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு...
சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்!

சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்! நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய ஆர்ணவ் விஜய், பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போதைய மிகப்பெரும் ஆச்சர்யம் யாதெனில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார் என்பது தான். இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது... இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் விளம்பரத்திற்காகவும், ஆர்ணவ் விஜய்க்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என  முதலிலேயே கூறிவிட்டார். நான் த...
ஜெ.நினைவு மண்டபத்தை திறக்கும் முதல்வர்!

ஜெ.நினைவு மண்டபத்தை திறக்கும் முதல்வர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார் இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. *இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது. *43 மீட்டர் அகலமும் கொண்டது. *மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. *ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. *காமராஜர் சாலையில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.*...
S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை!

S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகார...
தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி!

தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழ் நாட்டில் அதிரடி சுற்றுப்பயண திட்டத்தில் ராகுல்காந்தி! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தின் முழு விவரம் வருமாறு:- ராகுல்காந்தி 23-ந் தேதி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். பிற்பகல் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்கிறார். கோவையில் அவருக்கு சென்னியம்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிற்பகல் 3.15 மணிவரை திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கிறார். மாலை 5.15 மணிக்கு திருப்பூர் செல்லும் ராகுல்காந்திக்கு அவிநாசி புது பஸ் நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து திருப்...
பழனி கோயில் வாசலில் “மாஸ்க்” சிலை!

பழனி கோயில் வாசலில் “மாஸ்க்” சிலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பழனி திருக்கோவில் சார்பில் மலைக் கோவிலில் கொரோனோ காலத்தில் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு சிற்பம் வைக்க பட்டு உள்ளது.   கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் உயிர் கவசம் என்று முக கவசம் பயனை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக வைக்கப்பட்டு உள்ளது.    ...
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபுவின் பொம்மை நாயகி!

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபுவின் பொம்மை நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு. தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்‌ஷன்ஸ்" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து "ரைட்டர்" படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்‌ஷன்ஸ். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். 'பொம்மைநாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கிறது. யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்...
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!   கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  ...
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்த வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்த வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்த வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டம்! ஆந்திராவில் ரேஷன் பொருட்கள், வீட்டுக்கே சென்று வினியோகிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.539 கோடி செலவில் 9 ஆயித்து 260 வாகனங்களை மாநில அரசு வாங்கி உள்ளது இவற்றில், குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களுக்கான சுமார் 2 ஆயிரத்து 500 வாகனங்களை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று விஜயவாடாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ள மறுபயன்பாட்டு பைகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதால், ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் பகுதிக்கு எப்போது வாகனம் வரும் என்பதை மொபைல் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். கலப்படத்துக்கு வழியின்றி, சீல் வைக்கப்பட்ட பைகளில் தரமான அரிசியும், இதர பொருட்களும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வ...
சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்!

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியிருப்பதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...