ஜெயில் விமர்சனம்
அம்மா ராதிகாவுடன் சென்னையில் வசித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவருக்கு நந்தன் ராம் மற்றும் பாண்டி என்று இரண்டு நண்பர்கள். திருடுவதை தொழிலாக வைத்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு பிரச்சனையில் நண்பன் நந்தன் ராமை இழக்கிறார். மேலும் மற்றொரு நண்பர் பாண்டி ஜெயிலுக்கு சென்று விடுகிறார்.
தன் இரண்டு நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார். இறுதியில் திருட்டு தொழிலை கைவிட்டாரா? நண்பனை ஜெயிலில் இருந்து மீட்டாரா? நண்பரை இழக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். இவரிடம் உள்ள நடிப்பு திறமையை இயக்குனர் வசந்தபாலன் கொண்டு வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக வட சென்னை பாஷையில் சிறப்பாக பேசி கவர்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்தி...









