சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..!
சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆனது உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானம்..!
உலகின் இரண்டாவது மிகப் பெரிய சரக்கு விமானமான Antonov AN-124 விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ரஷ்யாவைச் சேர்ந்த Volga-Dnepr Airlines நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் 53.46 டன் சரக்குடன் சென்னைக்கு வந்தது. சீனாவின் ஜியாங் நகரில் இருந்து பிரமாண்டக் கருவிகள் இதில் கொண்டு வரப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் AN-124 ரக விமானம் தரையிறங்குவது இதுவே முதன்முறை. தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை இருப்பதால், இனிமேல் பெரிய ரக சரக்கு விமானங்கள் அடிக்கடி வர வாய்ப்புள்ளதாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் 69.1 மீட்டர் நீளம் கொண்டது. இறக்கைகள் மட்டும் இரு புறமும் சேர்த்து 73.3 மீட்டர் நீளத்துக்கு விரிவடைந்து காணப்படும். பிரமாண்ட உபகரணங்கள், ராணுவத...









