ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..! 100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!
ஆர்.கே.நகர் தொகுதியை பேசாமல் ஏலம் விடுங்கள்..!
100 கோடியை தாண்டி பண வினியோகம் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்..!
தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பேசாமல் அரசியல் கட்சிகளுக்கு ஏலத்தில் விட்டு விடலாம். எந்த கட்சியோ அல்லது எந்த வேட்பாளரோ அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கிறார்களோ அந்த தொகையை கொண்டு அந்த தொகுதிக்கு தேவையான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட தொகுதியின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரலாம்.
இந்த முறையை தேர்தல் ஆணையம் கையாண்டால் பணம் பதுக்கல்... வெட்டு குத்து கலாட்டாக்கள்... கள்ள ஓட்டு புகார்... தேவையற்ற அலைச்சல்கள்... எதுவும் நடக்காது. அரசு பணமும் வீணாகாது.
தமிழகத்தில் மட்டும் எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அங்கே ஓட்டுக்கு பணமழை கொட்டுவது சமீபத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பண மழை புகார் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில...









