ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்!
ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்!
ஜெர்மனி நாட்டில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி, ரூ.70 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘ஆன்லைன்’ வழியாக புகார் அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடிகர் ஆர்யா, அவரது தாயார் ஜமீலா, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகியோர் மீது கடந்த மாதம் 19-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஆர்யா போன்று பேசி அந்த பெண்ணிடம் மோசடி செய்ததாக முகமது அர்மான், ஹூசைனி ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் ஜாமீன்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு ...









