மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்..!
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத காவியங்களை படைத்த நிறுவனம் ‘மின் பிம்பங்கள்’. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘கையளவு மனசு’, ‘ஜன்னல்’, ‘ரயில் சிநேகம்’, மற்றும் பிரமிக்க வைத்த தொலைக்காட்சி உலகின் முதல் மர்மத் தொடரான ‘மர்ம தேசம்’, நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த ‘ரமணி Vs.ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ போன்ற தொடர்களை இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது.
இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படைப்புலகத்தில் கால் வைத்திருக்கிறது ‘மின் பிம்பங்கள்’. இந்த முறை தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் மேடை நாடகத்தைத் தயாரித்திருக்கிறது.
இயக்குநர் சிகரத்திற்கு மிகவும் பிடித்தமான படைப்பு உலகமான மேடை நாடக உலகத்தை மின் பிம்பங்களும் தொட்டிருப்பது பெருமைக்குரியது.
இந்த முதல் நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளும், மின...









