ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் – உ.பி., அவலம்
ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் - உ.பி அவலம்
உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உ.பி.,யில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால், மாநிலத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் புரளியை பரப்பும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது அம்மா உயிர...









