‘2.0’ பட தாமதம் அமெரிக்க கிராபிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு
'2.0' படத்தின் தாமதத்திற்கு நிஜக்காரணம் என்ன?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
ஜனவரி வெளியீடாக இருந்த இப்படம் தற்போது ஏப்ரல் வெளியீடாக மாறியுள்ளது. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் தாமதம் தான் காரணம் என தகவல்கள் வெளியாகின. உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து படக்குழுவினர் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் '2.0' படத்தின் பிரதான காட்சிகள் கிராபிக்ஸை கொடுத்திருந்தோம். இதற்கான 90% பணமும் அளித்திருந்தோம். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. மேலும், அவர்கள் அளித்த பணிகளைப் பார்த்தபோது சுமார் 50% பணிகளைத்தான் முடித்திருந்தார்கள். இதனால் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
தற...









