ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்!

தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்! தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நானே வருவேன் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் புதிய தலைப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிடுவார் எனவும், அதோடு தலைப்பு மாற்றத்துக்கான காரணத்தையும் அவர் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது....
புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புஷ்பா படத்தின் ரிலீஸ் அப்டேட்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி! தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு (Kurian Kodiyattu) உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது! தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி,   ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே  அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று  தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி...
‘பகலவன்’ கதை சர்ச்சை ‘பின்வாங்கப் போவதில்லை’ – லிங்குசாமி

‘பகலவன்’ கதை சர்ச்சை ‘பின்வாங்கப் போவதில்லை’ – லிங்குசாமி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
'பகலவன்' கதை சர்ச்சை 'பின்வாங்கப் போவதில்லை' – லிங்குசாமி கடந்த 2013ல் இயக்குநர் சீமான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் கதை தன்னுடைய 'பகலவன்' கதை சாயலில் இருப்பதாகவும், இந்தக் கதையைப் பத்து வருடங்களுக்கு முன்பே நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரமிடம் சொல்லியிருப்பதாகவும் அதன் பிறகு நடிகர் 'ஜெயம்' ரவியிடம் சொல்லி அவர் கதைக்கும் கால்ஷீட் கொடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், 'பகலவன்' சாயலில் இருக்கும் கதையை லிங்குசாமி எடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும் அந்த கதையை இயக்குநர் லிங்குசாமி கைவிட வேண்டும் எனவும் அந்த கடிதத்த்தில் சீமான் தெரிவித்திருந்தார் இயக்குநர் சீமான் கடிதத்திற்கு பதில் சொல்லும் விதமாக இயக்குநர் லிங்குசாமி, தாம் இந்தக் கதையை நடிக...
இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இயக்குனர் ஷங்கருக்கு தடை இல்லை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தனி நீதிபதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து லைகா தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. இதன் விசாரணையின் போது, ஏற்கனவே லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல எனக்கூறி, லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது....
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?... நடிப்பது யார்? - முழு விவரம்! கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களின் தலைப்பு மற்றும் அதில் யார் யார் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம். கிட்டார் கம்பி மேலே நின்று 'காதல்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். பிராஜக்...
தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் ரூ.520 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு! தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். அதன்படி ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில், கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவில், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்பட கோவிலில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஆகியோருடன் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து கோவில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கோவிலின் சார்பில் நடைபெறுகின்ற அனைத்து மையங்களையும் ஆய்வு செய்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் குற்றாலத்தி...
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்! பிரதமர் மோடி  தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் ஒரு முறைகூட மத்திய மந்திரிசபையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மந்திரிசபையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 மந்திரிகள் நேற்று ராஜினாமா செய்தனர். 12 மந்திரிகளின் ராஜினாமாக்களை  பிரதமர் மோடியின் பரிந்துரை பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகளின் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில் புதிதாக 43 மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி  தலைமையில் இன்...