ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

கண்டுபிடிக்கப்பட்ட இந்தோனேசியா விமானத்தின் கருப்புப் பெட்டி!

கண்டுபிடிக்கப்பட்ட இந்தோனேசியா விமானத்தின் கருப்புப் பெட்டி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசியாவில் 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஸ்ரீவிஜயா ஏர் என்னும் விமானச் சேவை நிறுவனம் இந்தோனேசியாவில் உள்நாட்டுச் சேவை மற்றும் சர்வதேச சேவைகளை அளித்து வருகிறது.   இந்நிறுவனத்தின் போயிங் 737 விமானம் நேற்று மதியம் ஜாகர்த்தாவில் இருந்து மேற்கு காலிமாண்டன் மாநிலத்தில் உள்ள போண்டியானக் இன்னும் இடத்துக்கு கிளம்பியது.  அந்த இடத்தை அடைய விமானத்துக்கு 90 நிமிடங்கள் ஆகும். ஆயினும் விமானம் கிளம்பிய 44 நிமிடங்களில் விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.  விமானத்தினுள் அப்போது 56 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர்.  காணாமல் போன இந்த விமானத்தைத் தேடும் பணியில் உடனடியாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.   இந்நிலையில் ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் மற்றும் மனித உடல்கள் மீனவர்களிடம் கிடைத்ததால் விமான விபத்துக்குள்ளாகியது உ...
கட்டுப்படுத்தப்பட வேண்டுமா டிக்கெட் விலை – அரவிந்த் சாமி டுவிட்

கட்டுப்படுத்தப்பட வேண்டுமா டிக்கெட் விலை – அரவிந்த் சாமி டுவிட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை என நடிகர் அரவிந்த் சாமி டுவிட் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில், வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எ...
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும். அலங்காநல்லூர் 655, பாலமேடு 651, அவனியாபுரம் 430 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்...
திரையரங்குகள் என்பது கோயிலுக்கு சமம், OTT என்பது வீட்டு பூஜை அறைக்கு சமம் – நடிகர் இயக்குனர் சசிக்குமார் அதிரடி!

திரையரங்குகள் என்பது கோயிலுக்கு சமம், OTT என்பது வீட்டு பூஜை அறைக்கு சமம் – நடிகர் இயக்குனர் சசிக்குமார் அதிரடி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  திரையரங்குகள் என்பது கோயிலுக்கு சமம், OTT என்பது வீட்டு பூஜை அறைக்கு சமம் - நடிகர் இயக்குனர் சசிக்குமார் அதிரடி!   பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...???? எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா எமது அலுவலகத்தில் இன்று மாலை சிறப்பாக கொண்டாடப்பட்டது .பெரிய அளவு யாரிடமும் வசூல் செய்யாமல், திரைத்துறையைச் சார்ந்த 3 பேர் எமக்கு அள்ளி தந்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு நன்றி???? 10 கிலோ பச்சை அரிசி,1கிலோ வெல்லம்,1கிலோ பருப்பு,நெய்,முந்திரி திராட்சை, வேஷ்டி சட்டை, ஆகியவற்றோடு சங்கம் சார்பில் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக எமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரமணியபுரம் இயக்குநர் நடிகர் சசிக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு சங்கம் சார்பில் பாராட்டு மடல் வழங்கி கௌரவிக...
HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோனா பாதிப்புகளால் பல நாடுகள் தங்கள் விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன இந்நிலையில், இந்தோனேசியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படாமல் இருக்க கோடீசுவரர் ஒருவர் தானும் தனது மனைவியும் பயணிக்கும் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் ஜகர்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பாலி நகரத்துக்கு தன் மனைவியுடன் செல்ல திட்டமிட்டார். ஆனால் பிற பயணிகளுடன் பயணித்தால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் தான் செல்லவிருக்கும் பயணிகள் விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளார். இதற்காக அவர்  ரூ. 6 லட்சம் இந்தோனே...
ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன்

ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன்

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள்
ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன் கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை அண்ணா சிலை அருகே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நேற்று 2-வது நாள் போராட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:- புதுவை கவர்னர் கிரண்பேடி மக்களுக்கு எதிராக உள்ளார். அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், அரசாணை பிறப்பித்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். நாட்டுக்கு கவர்னர் பதவியே தேவையில்லை என்பதுதான் இங்குள்ள அனைவரின் கருத்து. இந்தியா முழுவதும் அந்த பதவியை காலி செய்யவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-...
கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இணைய வழி கல்விக்காக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெ...
பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி!

பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்து தண்டிக்க வலியுத்தி வருகிற 10-ந்தேதி கனிமொழி தலைமையில் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலத்காரம் செய்து, வீடியோ எடுத்து பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு, சிவீல் என்ஜினீயர் சபரிராஜன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சமயத்தில் இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி....
வாய்விட்டு சிரித்தேன் என்பதற்காக கூட என் மீது ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது – கங்கனா

வாய்விட்டு சிரித்தேன் என்பதற்காக கூட என் மீது ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது – கங்கனா

CINI NEWS, HOME SLIDER
வாய்விட்டு சிரித்தேன் என்பதற்காக கூட என் மீது ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது - கங்கனா சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா, இதனால் பல வழக்குகளை எதிர் கொண்டுள்ளார். தேசத்துரோக வழக்கில் மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் நேற்று கூட அவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், கங்கனா, தான் சித்ரவதை செய்யப்படுவதாக உருக்கமாக புலம்பி தீர்த்து விட்டார். “விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன் என்பதால் எனக்கு எதிராக வரிசையாக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன” என குறிப்பிட்ட அவர்’’ வாய்விட்டு சிரித்தேன் என்பதற்காக கூட என் மீது ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். “என்னை எதற்ககாக மன ரீதியாக, உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக சித்ரவதைக்கு ஆளாக்க வேண்டும்?” என உருக்கமாக கேள்வி எழுப்பிய கங்கனா “இந்த தேசம்...
தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது – மு.க.ஸ்டாலின்

தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி பேசியவர், தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது என்று கூறினார் சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை  பொதுமக்களுக்க வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,  சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் பணியாற்றுவோம். எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன். மாற்றத்தை எதிர்பார்த்து, நான் நீங்கள் மட்டுமல்ல, மக்களும் காத்துள்ளனர். எனவே, நீங்கள் அதற்கு வழிவகை செய்ய வேண்டும். தை பிறந்தா...