சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

புகையிலை,குட்கா, பான்மசாலா விற்க தடை நீடிப்பு!

புகையிலை,குட்கா, பான்மசாலா விற்க தடை நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்போது மீண்டும் அந்த பொருட்களின் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை சேமித்து வைக்கவோ, விற்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மீறி பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது....
தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழகத்தில் தொழில் செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் முதலீடு செய்ய பிரபல நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அழைப்பு விடுத்தார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்க...
கொரானா ஒழியணும் இல்ல தடுப்பூசி வரணும் அதுவரை பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு!

கொரானா ஒழியணும் இல்ல தடுப்பூசி வரணும் அதுவரை பள்ளிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஒன்று கொரானா ஒழிய வேண்டும் அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் அதுவரை பள்ளிகளை திறக்கக்கூடாது என்று லட்சக்கணக்கான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்   மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது என்பது அரசின் மிகமோசமான முடிவாகும். நெருப்பை அணைக்க வேண்டி இருக்கும்போது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானது. நடப்பு முதலாவது பருவம், ஆன்லைன் வழியிலேயே நீடிக்க வேண்டும். கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரையோ பள்ளிகளை திறக்கக்க...
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!?

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் போனாரா டிரம்ப்!? அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலை செய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி இருந்தார். வெள்ளிக்கிழமை ...
கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் - முதல்வர் முடிவு கொரானாவை தடுக்க ,5ம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- டெல்லியில் இப்போது வரை அனுமதிக்கப்பட்ட வற்றைத் தவிர, முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ப...
தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தொடங்கியது தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இயல்பு தேதியான இன்று  தொடங்கியது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடசமாக கொடுமுடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குழித்துறையில் 4 சென்டி மீட்டர், ஏற்காடு, பஞ்சப்பட்டி (கரூர்), சித்தார் (கன்னியாகுமரி), மயிலம்பட்டி(கரூர்) ஆகி...
பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை சினிமாவாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    சமீபமாக இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றிதரும் படைப்புகளாக  மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள்  மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை  திரைபடைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாகவுள்ளது. பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் “கர்ணம் மல்லேஸ்வரி” என்பது குறிப்பிடதக்கது. இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் முன்னுதரானமாக விளங்கும் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை பன்மொழிகளில் முழுமையான இந்திய திரைப்படமாக தமி...
இ-பாஸ் இல்லாம சிறப்பு ரயிலில் போக முடியாது!

இ-பாஸ் இல்லாம சிறப்பு ரயிலில் போக முடியாது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இ-பாஸ் இல்லாம சிறப்பு ரயிலில் போக முடியாது! கொரானா பீதிக்கு இடையில் சில தளர்வுகள் காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. தினசரி 200 ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்து உள்ளது. தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்த நிலையில் இந்த சிறப்பு ரெயில்களில் பயணிக்க ‘இ-பாஸ்’ கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு உத்தரவின்படி ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் ‘இ-பாஸ்’ பெற...
பொது இடத்தில் துப்பினால் அபராதம், தண்டனை – தமிழக அரசு

பொது இடத்தில் துப்பினால் அபராதம், தண்டனை – தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பொது இடத்தில் துப்பினால் அபராதம், தண்டனை - தமிழக அரசு தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம். ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழிய...
டெல்லியில் உளவு பார்த்து சிக்கிய பாக்., தூதரக அதிகாரிகள்!

டெல்லியில் உளவு பார்த்து சிக்கிய பாக்., தூதரக அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    டெல்லியில் உளவு பார்த்து சிக்கிய பாக்., தூதரக அதிகாரிகள்! தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான். இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்த்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்....