வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

காயமடைந்தாலும் டிஸ்கவரி சாகச நிகழ்ச்சியில் நடித்து கொடுத்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டிஸ்கவரி தொலைக்காட்சியில் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்று தருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது உடனே ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்ட நிலையில் அவர் சென்னை திரும்பினர்....
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய  அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ பெரும் கடன் சுமையில் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான கடன் சுமையால் இந்த நிறுவனம் பயணிகளுக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்குவதில் சிக்கல் உருவானது. இதேபோல், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை விற்பதாக அறிவித்தது. எனினும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டாததால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதும் விற்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதாவது இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதாக மத்திய முதலீ...
ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… ரசிகர்கள் அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  ரஜினிகாந்த் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு... ரசிகர்கள் அதிர்ச்சி! சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு மைசூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து  நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று காலை வந்தார். ரஜினியும், அவர் மகள் ஐஸ்வர்யா உட்பட 48 பயணிகளோடு புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டு பிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது. அதுவரை ரஜினிகாந்த் உட்பட அனைத்து பயணிகளும் விமானத்திலேயே காத்திருந்தனர். கோளாறு சரியானதும் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றது. நடிகர் ரஜினிகாந்த் சமீப காலத்தில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். பொதுவாக ஆன்மீகத்திலும்...
திட்டமிட்டபடி ஜனவரி 31 சந்தானம் – யோகி பாபுவின் ” டகால்டி ” ரிலீஸ்

திட்டமிட்டபடி ஜனவரி 31 சந்தானம் – யோகி பாபுவின் ” டகால்டி ” ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    திட்டமிட்டபடி ஜனவரி 31 சந்தானம் - யோகி பாபுவின் " டகால்டி " ரிலீஸ் தயாரிப்பாளர் அறிவிப்பு | 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம்" டகால்டி ". ஜனவரிமாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகின் முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், இந்திப் பட உலகின் தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, மற்றும் ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், பிரபல பாடகர் விஜயநாராயணன் இசை...
சரத்தின் விடா முயற்சி எனக்கு பிடிக்கும் ராதிகா – கோவம் தான் ராதிகாவிடம் பிடிக்காத விஷயம் சரத் – மனம் திறந்த ஜோடி

சரத்தின் விடா முயற்சி எனக்கு பிடிக்கும் ராதிகா – கோவம் தான் ராதிகாவிடம் பிடிக்காத விஷயம் சரத் – மனம் திறந்த ஜோடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகர் சரத்குமார் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து, அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கூறியதாவது:- சரத்குமார் கூறியதாவது :- சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்மையில் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இயக்குநர் தனா இயக்குநர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் கதையை எங்கள் இருவருக்கும் கூறினார். கதையைக் கேட்டதும் இருவருக்கும் பிடித்திருந்தது. மண் மணம் மாறாமல் ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றை எப்படி...
நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்! பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் . கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. செந்தில், .பால்ராஜ், ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி...
கமல்-கபில்தேவ் முன்னிலையில் “83” திரைப்பட சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கமல்-கபில்தேவ் முன்னிலையில் “83” திரைப்பட சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    “83” திரைப்பட சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. 1983 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியா உலககோப்பையை வென்ற தருணம் இந்தியா முழுதும் எழுந்து நின்று ஆர்பரித்த வரலாற்றின் பொன்னான தருணம். ஒரு திரில்லர் படத்திற்கிணையான போராட்டத்தை நடத்தி, நம் அணி வீரர்கள் உலககோப்பயை வென்றார்கள். அப்போதைய கேபடன் கபில்தேவ் அவர்களின் வாழ்க்கை பின்னணியில் நம் அணி உலககோப்பையை வென்றதை மீட்டுருவாக்கம் செய்துள்ள படம் தான் “83”. கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரிலயன்ஸ் எண்டர்டெயி...
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? கண்டறிய விசாரணை தீவிரம்!

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? கண்டறிய விசாரணை தீவிரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? கண்டறிய விசாரணை தீவிரம்! தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள், குடும்ப பின்னணி குறித்தும் விரிவாக விசாரித்தனர். 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. வெளி மாவட்டத்தில் இருந்து ராமேசுவரம், கீழக்கரை பகுதியில் தேர்வு எழுதியதற்கான காரணம் குறித்து கேட்டபோது, திதி கொடுப்பதற்காக ராமேசுவரம் வந்ததால் அங்கு தேர்வு எழுதினேன் என்று 10-க்கும் மேற்பட்டோர் பதில் அளித்தனர். சிலர் தொழில் வி‌ஷயமாக ராமேசுவரம் வந்ததால் இங்கு தேர்வு எழுதியதாக தெரிவித்தனர். இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. இதனிடையே டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி நந்தகுமார், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கேள்வித்தாள்கள் வைக்கப்பட்டிருந்த கருவூல அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாள்கள் எப்போது கொண்டு ச...
பாரதிராஜா இயக்கி நடிக்கும் “மீண்டும் ஒரு மரியாதை”

பாரதிராஜா இயக்கி நடிக்கும் “மீண்டும் ஒரு மரியாதை”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’* மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’. இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான வ...
வைரஸ் அச்சுறுத்தல் – சென்னை விமான நிலையத்தில் கடும் பரிசோதனை!

வைரஸ் அச்சுறுத்தல் – சென்னை விமான நிலையத்தில் கடும் பரிசோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சீனாவில் திடீரென கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் நகரமே முடங்கியது. போக்குவரத்து விமான சேவை அனைத்தும் முடங்கியது. நகரில் இருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அதே போல நகருக்குள் யாரும் நுழையவும் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்து அதன் பிறகே அனுப்பப்படுகின்றனர். விமான நிலைய சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி இந்திய விமான நிலைய ஆணையம் இச்சோதனையை செய்துள்ளது.  ...