வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

2019 புத்தாண்டை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த்..!

2019 புத்தாண்டு கொண்டாட்டத்தை குடும்பத்தோடு அமெரிக்காவில் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த். பேட்ட ரிலீசுக்கு முன் சென்னை திரும்புகிறார்.

அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

ஷங்கரின் ‘2.0’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ பட பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது

அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மருமகனும் நடிகருமான தனுஷும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனுஷின் தோள் மீது ரஜினி கைப்போட்டுக் கொண்டு சிரிக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் ரஜினி, பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் புரொமோஷனில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

451 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன