வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்

 

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை முடிவில் மதுரை கலெக்டர் உட்பட தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் நேற்றிரவு 7 மணியளவில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட இருந்தோம்.

ஆனால், இந்த அதிகாரிகள் அனைவர் மீதும் சட்டப்படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், கலெக்டர் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து விட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார். மேலும், மதுரை கலெக்டர் நடராஜனை அப்பதவியில் இருந்து மாற்றி விட்டு, அதற்கு பதில் எஸ்.நாகராஜனை கலெக்டராக நியமித்துள்ளதாகவும், அதேபோல, புதிய உதவி தேர்தல் அதிகாரியாக சாந்தகுமார் என்பவரை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை பதிவு செய்துகொள்கிறோம். அதே நேரம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மதுரை முன்னாள் மாவட்ட கலெக்டர் நடராஜன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்

508 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன