
கார்த்தியும் அவரது அண்ணி ஜோதிகாவும் அக்கா தம்பியாக நடிக்கும் படத்தை ஜித்து ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. கார்த்தியின் ஜோடி யார் என்பதை முடிவு செய்யாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த நிலையில் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்த நிகிலா விமல் கார்த்தியின் ஜோடியாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகிலா விமல் இயக்குனர் ஜித்து ஜோசப் ஹீரோ கார்த்தி பேசிக் கொண்டு இருப்பது போன்ற படங்களை தனது பக்கத்தில் வெளியிட்டு ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்றிருக்கிறார் கார்த்தி.
இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

588 Views
