புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

ரஜினி ஜோடி நயன்தாரா… நிவேதா மகள்… நயன்தாராவின் மகளில்லையாம் – தர்பார் அப்டேட்

ரஜினிக்கு ஜோடி நயன்தாரா… ரஜினி மகள் நிவேதா தாமஸ் ஆனா நயன்தாரா மகள் இல்லையாம் நிவேதா தாமஸ்… அப்பா ரஜினிதானாம்… என்ன ஒரே குழப்பமா இருக்கா… இதுதான் தர்பார் லேட்டஸ்ட் அப்டேட்

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் “தர்பார் ” படத்தில் நடித்துவருகிறார்.

இது ரஜினியின் திரைப்பயணத்தில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது.

இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கியது.

அதைத்தொடர்ந்து மும்பையில் நடந்த ஷூட்டிங் படங்கள், வீடியோ பல அடிக்கடி வெளியாகி படக்குழுவை ஷாக் ஆக்கி ரசிகர்களை குஷி படுத்தியது.

இந்த நிலையில்… நிவேதா ரஜினியின் மகளாக தர்பாரில் நடிக்கிறாராம். ஆனால் நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லையாம்.

தர்பார் படத்தில் ரஜினி தாதா, போலீஸ் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். எனவே தாதா ரஜினியின் மகள் நிவேதாவாம், போலீஸ் ரஜினியின் ஜோடி நயன்தாராவாம்.

ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் தர்பார் இணையும் என்கிறார்கள் கதை தெரிந்தவர்கள்.

892 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன