வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஆர்யா-சாயிஷா காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி…!

 

காதல் தம்பதியை மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்த்த டெடி…!

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்த ‘கஜினிகாந்த்’ படத்தின் மூலம் காதலர்களான ஆர்யா – சாயீஷா ஜோடி, தற்போது தம்பதிகளாக நடிக்கும் முதல் படத்தையும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவே தயாரிக்கிறார்.

’டெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘நாணயம்’, ‘மிருதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்குகிறார்.

‘ராஜா ரங்கூஸ்கி’, ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த யுவா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

சக்தி சரவணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்க, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் சிவநந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்.

476 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன