சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

 

முதல் முறையாக போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் திமுக வெற்றி..!

தமிழகத்தில் உள்ள 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

அதிலும் தி.மு.க. போட்டியிட்ட 19 இடங்களிலும் அக்கட்சி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடினார்கள்.

அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8-ல் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வி அடைந்தார். புதுச்சேரியை காங்கிரஸ் கைப்பற்றியது.

அதேபோல், தி.மு.க. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா 2 இடங்களிலும் வெற்றி வாகை சூடியது.

அதேபோல், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை போட்டியிட்ட தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மொத்தத்தில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 இடங்களை பிடித்தது. இந்த தேர்தலில் தி.மு.க. 37 இடங்களை பிடித்திருக்கிறது.

796 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன