ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
Shadow

தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

 

ஆடுகளம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் வருகிறார்.

அவர் இப்போது “கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் டிரைலர் இன்று 1 மணிக்கு வெளியாகிறது.

தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்கள்.

இந்தி டிரைலரை டாப்சியே ரிலீஸ் செய்கிறாராம்.

தமிழில் ஆடுகளம் படத்தில் ஜோடியாக நடித்த டாப்சியின் பட டிரைலரை தனுஷ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

639 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன