செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

 

தமிழ் சினிமாவில் சமீபத்திய சர்ச்சை நாயகனாக பரபரப்பான செய்தியில் சிக்கியவர் பாபி சிம்ஹா. இவர் இப்போது 3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகன் இரட்டை வேஷம் போடுவது சகஜம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வேஷத்தில் நடித்திருந்தார்.

அதே போல உலகநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேஷங்களில் நடித்திருக்கிறார்.

அவர்களை தொடர்ந்து பாபி சிம்ஹா வல்லவனுக்கு வல்லவன் படத்தில் 4 வேஷத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

விஜய் தேசிங்கு என்பவர் இயக்கிய இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

படம் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.

பாபிசிம்ஹாவுடன் ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் தேசிங்கு டைரக்டு செய்து இருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன

467 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன