சனிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில், வீடியோ லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

 

போலீஸ் காரில் வந்து இறங்கிய ரஜினி… தர்பார் ஷூட்டிங் ஸ்டில் லீக் ஆகி மீண்டும் பரபரப்பு…!

தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் எதுவும் வெளியாகமல் தடுக்க பல முயற்சிகள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

இன்று மீண்டும் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் படம் , வீடியோ ஒன்று லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் போலீஸ் காரில் இருந்து இறங்கி செல்வது போல அந்த படம் உள்ளது.

ஏற்கனவே தர்பார் படத்தில் ஒரு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பது தெரிந்ததே. அதை உறுதி செய்து கொள்ளளும் வகையில் போலீஸ் காரில் வந்து இறங்குகிறார் ரஜினி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன