வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

 

சின்ன மாற்றத்துடன் மீண்டும் களமிறங்கிய பாண்டவர் அணி… வெற்றியை தக்கவைப்பாரா விஷால்..!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணியில் போட்டியிடும் தலைவர், பொருளாளர், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் 26 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் சின்ன மாற்றம் மட்டுமே செய்திருக்கிறார்கள். முந்தைய விஷால் அணியில் நிர்வாக பதவிக்கு பொன்வண்ணன் தேர்வாகி இருந்தார். இப்போது அவர் இடத்தில் பூச்சி முருகன் நிறுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே பூச்சி முருகன் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்தார். முன்பு இருந்த விஷால் டீமில் குஷ்பு இல்லை. இப்போது செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நிறுத்தப்படுகிறார்.

கடந்த முறை சரத்-ராதாரவியை எதிர்த்து களம் கண்ட போது அந்த நிர்வாகத்தின் முறைகேடுகளை குறிப்பிட்டு விஷால் அணி பிரசாரத்தில் ஈடுபட்டது. அதிலும் குறிப்பாக நடிகர் சங்க கட்டிடம், நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக விற்ற புகார்.

இதில் குறிப்பிட்ட மாதிரி நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிவடையும் நிலையில் உள்ளது. நடிகர் சங்க நிலம் முறைகேடாக விற்கபட்ட விவகாரங்களில் ராதாரவி, சரத்குமார் மீது வழக்கு நடந்து வருகிறது.

அதோடு நடிகர் சங்கத்தில் ஓய்வூதியம் வாங்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம்தான் தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் வரப்போகும் தேர்தலில் விஷால் டீமுக்கு எதிராக ரித்திஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்க திட்டமிட்டார்கள்.

ஆனால் எதிர்பாராத விதமாக ரித்திஷ் திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி விஷால் அணியை எதிர்த்து களம் இறங்க திட்டமிட்டுள்ளது.

கடந்த முறை பொதுத் தேர்தல் போல பெரும் பரபரப்பான சூழலை நடிகர் சங்க தேர்தல் ஏற்படுத்தி இருந்தது.

அதோடு விஷால் அணி புதுசாக பிரபலமான கமர்சியல் ஹீரோக்களோடு அணி சேர்த்து இறங்கி வெற்றி பெற்றது.

இந்த முறை அதே போன்ற வெற்றி மீண்டும் விஷாலுக்கு கிடைக்குமா… அல்லது மறைந்த ரித்திஷ் மூலமாக ஏற்படுத்தப்பட்ட ஐசரி கணேஷ் அணி வெல்லுமா…

விஷால் அணியை பொறுத்த வரை பதவிக்கு வருவதற்கு சொன்ன வாக்குறுதியில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில் உதயா தலைமையில் ஒரு அணி வரும் என்ற தகவலும் பேசப்படாமல் இல்லை.

353 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன