செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சொன்னா சிரிக்க கூடாது… எனக்கு இந்திய பிரதமர் பதவி… என் புருசனனுக்கு அமெரிக்க அதிபர் பதவி மேல ஒரு ஆசை – சொன்னது பிரியங்கா சோப்ரா…

 

சொன்னா சிரிக்க கூடாது… எனக்கு இந்திய பிரதமர் பதவி… என் புருசனனுக்கு அமெரிக்க அதிபர் பதவி மேல ஒரு ஆசை – சொன்னது பிரியங்கா சோப்ரா…

அட கொப்புறான் சத்தியமா நெசமாலும் தாங்க… நம்ப விஜய் பட ஹீரோயின் பிரியங்கா சோபரா இந்திக்கு போய் இப்ப ஹாலிவுட் படத்துல நடிக்க போயிட்டாங்க.
இவங்களுக்குத்தான் இப்படி ஒரு ஆசை…

இந்த பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவங்க கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்கு போய் மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவுடன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா ஒரு முன்னணி இதழுக்கு அளித்த பேட்டியில் “தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதோட விட்டா பரவாயில்லை அவரின் காதல் கணவர் நிக் ஜோன்ஸ் அமெரிக்காவுக்கு அதிபராக ஆவதற்கும் விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்த விஷயம் டிரம்புக்கும், மோடிக்கும் தெரியுமான்னு நீங்க கேக்குறது எனக்கு தெரியுது.

ஆசைதான படுறாங்க… படட்டுமே காசா பணமா… ஆசைக்கு… விடுங்க…

ஆனா ஒண்ணு…
இவ்ளோ ஆசை இருந்தும் இப்போதைக்கு எங்க இரண்டு பேருக்கும் அரசியல் ஐடியா எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னா பாருங்களேன்…

என்ன இருந்தாலும் பிரியங்கா உங்க நேர்மை புடிச்சிருக்கு…!

564 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன