செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

 

மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி – தர்பார் அப்டேட்

ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் பட இரண்டாம் கட்ட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.

போலீஸ் காரில் இருந்து ரஜினி இறங்கி செல்லும் வீடியோ ஒன்று லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கியுள்ளது.

இந்த நிலையில் தர்பார் படத்தில் சண்டைக்காட்சி ஒன்று இன்னும் ஒரு சில தினங்களில் படமாக்க இருக்கிறார்கள்.

மும்பையில் மக்கள் கூடும் சந்தையில் இந்த சண்டைக் காட்சி எடுக்க திட்டம்.
ஏற்கனவே செட்டுக்குள் எடுக்கும் கட்சிகளின் வீடியோ, படங்கள் அடிக்கடி லீக் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மக்கள் கூடும் இடத்தில் என்றால் இன்னும் சொல்ல வேண்டாம். இருந்த போதும் பல பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க இருக்கிறார் இயக்குனர்.

இந்த சண்டைக் காட்சியை ராம்-லக்‌ஷ்மன் என்று அழைக்கப்படும் இரட்டை சகோதரர்கள் படமாக்க உள்ளனர்.

ரஜினிகாந்த் இந்த சண்டைக்கு தயாராகி வருகிறார்.

523 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன