புதன்கிழமை, ஜூன் 17
Shadow

ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

 

ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

நடந்து முடிந்த தேர்தலில் இமாலய வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாகவும், 25 அமைச்சர்கள் நியமிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இப்போது அந்த 5 துணை முதல்வர்களில் ஒருவராக நடிகை ரோஜா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி தமிழ் திரையுலகத்தை பரபரப்பாக்கி உள்ளது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 25 அமைச்சர்களும் 5 துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்று அறிவித்தார்.

இவர்களின் பதவி பிரமாணம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளதகாவும் தகவல் வெளியானது.

நகரி தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற ரோஜா தேர்தலின் போது ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.
அதன் பலனாக துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

693 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன