வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்… நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

 

தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்…
நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது.

முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது.

விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள்.

இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது.

பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்த நிலையில் ஐசரி கணேஷ் அழைப்பின் பெயரில் விஷால், கார்த்தியும் திடீரென சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு ஐசரி கணேஷ் அலுவலகத்தில் நடை பெற்றது. நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி, பென்ஷன் உதவி என பல நல்ல விஷயங்களை விஷால் அணிக்கு செய்து வந்த ஐசரி கணேஷ் திடீரென எதிராக மாறியது ஏன் என்ற கேள்விக்கு விடை அந்த சந்திப்பில் தெரிந்ததாம்.

விஷாலை அழைத்த ஐசரி கணேஷ் பார்த்ததும் “நீ ஏன் எதிர்க்கட்சித் தலைவரை போய் பார்த்தாய். அதனால் அதிமுக அரசு உன் மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடு. மீறி நின்றால் கைதாவதற்கு வாய்ப்பு உண்டு” என்று மிரட்டும் வகையில் கூறியிருக்கிறார்.

இதைக் கேட்டு ஷாக ஆன விஷால் பதிலுக்கு “என் சிறுவயதில் இருந்து திமுக தலைவர் குடும்பத்தோடு பழகி வருகிறோம். அதிலும் உதயநிதி ஸ்டாலின் என் கல்லூரி நண்பன். நான் போய் சந்தித்ததற்கும் நடிகர் சங்க தேர்தலுக்கும் என்ன தொடர்பு” என்று பதில் சொல்ல அந்த சந்திப்பில் கடும் வாக்குவாதங்கள் நடந்துள்ளது.

இதற்கிடையில் கார்த்தியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சமூகத்தை சேர்ந்தரவர்கள் என்றாலும் முதல்வர் ஆன பின் கார்த்தி மரியாதை நிமித்தமாக கூட முதல்வரை போய் சந்திக்காததால் அவர் மீதும் ஆளும் கட்சி கோபமாக இருக்கிறது என்றும் கூறி அன்பாக மிரட்டல் விட கடுப்பான விஷாலும், கார்த்தியும் அந்த சந்திப்பை பாதியிலேயே கட் செய்து கொண்டு வெளியேறி இருக்கிறார்கள்.

நடிகர் சங்கம் என்பது திரைத்துறை. இதில் அரசியல் கலப்பு இருந்தால் அதிலும் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு வந்தால் அந்த பாதிப்பு உறுப்பினர்கள் அனைவரையும் பாதிக்கும்.

அதிலும் ஐசரி கணேஷ் போன்ற மிக பிரபலமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துகிறவரகள் இது போன்ற பொறுப்புகளை ஏற்க வருவதற்கு பதில் ஒரு ஆலோசகராக, வழிகாட்டியாக இருப்பதுதான் அவர்களின் மதிப்பை உயர்த்தும்.

அதிலும், நேற்று முன் தினம்வரை விஷால் அணியில் இருந்த பலரையும் இப்போது எதிர் அணிக்கு அழைத்து வந்த பெருமை ஒரு அமைச்சரை சேருமாம். அவரே ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் போன் செய்து விஷாலுக்கு எதிராக நிற்க அழைக்கிறாராம்.

விஷாலின் பாண்டவர் அணியில் துணை தலைவர் பதவிக்கு நிற்கும் பூச்சி முருகன் திமுக தலைவர் ஸ்டாலின் வலது கரம். அதே போல கருணாஸ் அமமுக கட்சியின் தினகரன் அனுதாபி. இப்படி இருக்க… நடிகர் சங்க தேர்தல் இந்த முறையும் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

675 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன