வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

பணம் கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பவர்களுக்கு ஜூன் 23 செருப்படி பதில் கிடைக்கும் – விஷால் பரபரப்பு பேச்சு

 

கரையான்கள் கஷ்டப்பட்டு ஒன்று ஒன்றாக சேர்ந்து புற்று கட்டி வைக்கும் அதில் வந்து சுலபமாக கரு நாகம் குடிபுகுந்து கொள்ளும் இந்த கதை உங்களுக்கு தெரியும்.

இப்படி ஒரு கதையை உதாரணமாக சொல்லி பாண்டவர் அணியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் விஷால் பேசினார்.

அவர் பேசும் போது;

கடந்த முறை தேர்தல் வந்த போது காலியாக இருந்த நடிகர் சங்க மைதானத்தில் நிலத்தின் மீது கை வைத்து இடத்தை மீட்டு நல்ல கட்டடம் கட்டப்படும் என்று சொல்லிவிட்டு கண்ணீரோடு தேர்தலில் நின்றோம்.

அதே போல உங்கள் ஆதரவோடு வென்றுவிட்டோம்.

இந்த முறை கட்டடத்திற்கு உள்ளே வந்து நின்று மகிழ்ச்சியோடு மீண்டும் தேர்தலில் நிற்கிறோம்.

பதவி ஆசைக்குதான் தேர்தலில் நிக்கிறியா என்று கேட்டார்கள். பொடிப்பசங்க வந்து என்ன பன்ன போறீங்கன்னு கேட்டாங்க. மீட்க போறீங்களா, முடியாது, சாதிக்க போறீங்களா , முடியவே முடியாதுன்னு அபசகுனமா நெகட்டிவ்வாதான் பேசினாங்க.

ஆனா ஒண்ணு மட்டும் எங்க பாண்டவர் அணியை பொறுத்தவரை எப்போதும் நெகடிவ் விஷயங்களை பேச மாட்டோம். அதனாலதான் நடிகர் சங்க பத்தரத்தை மீட்டு எடுத்தோம். 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நடிகர் சங்க சொத்து மறுபடியும் நடிகர் சங்கத்துக்கே கொண்டு வந்திருக்கோம்.
நாங்க கேட்ட கேள்விக்கு அன்னிக்கே பதில் சொல்லி இருந்தா இப்ப பாண்டவர் அணியே வந்திருக்காது.

அப்ப சொன்ன மாதிரி உங்கள் ஆதரவோடு தேர்தலில் ஜெயிச்சி சொன்ன எல்லாத்தையும் செய்திருக்கோம்.

மறுபடியும் தேர்தலில் உங்கள் ஆதரவோடு ஜெயிச்சி இந்த கட்டடத்தை முடிப்போம்.

கட்டடம் வராது வரவே வராதுன்னு சொன்னவங்களுக்கு தக்க பதிலடி ஜூன் 23 அன்னிக்கு நீங்க குடுக்க போறீங்க.


ஒண்ணு சொல்வாங்க இந்த எறும்புங்க எல்லாம் ஒன்னு சேந்து ஒன்னு கட்டி வைக்குமாம்… அதுல பாம்பு வந்து குடி பூந்துகுமாம். நம்பள மாதிரி எறும்புங்க ஆயிரக்கணக்கில் ஒண்ணு சேர்ந்து கட்டி வைக்கிறதுல பாம்பு வந்து குடி புகுந்து கொள்வது ஏன்னா பாம்புக்கு கட்டத் தெரியாது. எறும்புங்க எல்லாம் ஒற்றுமையா கட்டி முடிக்கிற நேரம் பாம்பு உள்ள போக விட்டுட முடியுமா… பாம்பு உள்ள வந்த பிறகு எடுக்க கைவிட்ட கொத்தும்னு தெரியும்… உள்ள வர்றப்பவே பாம்புன்னு தெரியுதே அத எப்படி உள்ள விட முடியும்…

இத ஒரு உதாரணமா தான் சொல்றேன்.

எம்ஜிஆர், சிவாஜி,எஸ்ஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களின் ஆன்மா எங்களை வழி நடத்துகிறது.

கட்டடம் கட்டி முடிச்சதும் உறுப்பினர்கள் எல்லாரும் பட்டுப்புடவை, பட்டு வேட்டியில வந்து கட்டத்தையும் என்னையும் நான் கட்டிக்கப் போற பொண்ணையும் வாழ்த்த போறீங்க.

அப்புறம் காசு கொடுக்கிறோம் இங்க வாங்கன்னு நிறைய பேரை அழைக்கிறாங்க. இங்கயும் காசு குடுத்து ஓட்டு வாங்கிடலாம்னு நினைக்கிறீங்க இல்ல உங்களுக்கு கண்டிப்பா தேர்தல் முடிவு செருப்படியாதான் இருக்கும்.

காசு குடுத்து ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறாங்க. பாண்டவர் அணி ஜெயிக்கனும்னா இன்னும் 30 நாள் பட்டினியா கூட இருப்போம்னு சொன்னீங்கன்னா உங்கள் வீட்டுல பல வருஷம் விளக்கெரியும். பட்டினி இருக்காது.

நாங்கள் அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்… நடிகர் சங்கத்துக்கு கட்டடம் தானே கட்றோம். உள்ள ரோடு இருக்காம், போஸ்ட் ஆபீஸ் இருந்துச்சாம். இப்படி எல்லாம் சொல்லி கட்டடத்தை தாமதப்படுத்திட்டாங்க… இல்லனா இன்னேறம் கட்டடம் முடிஞ்சிருக்கும்.

இப்பவும் சொல்றேன். கட்டடம் முடிஞ்சி வரும் வருமானம் எல்லாம் உறுப்பினர்கள் நலனுக்குதான் செலவாகும்
கண்டிப்பாக அடுத்த தேர்தல் நம்ப சொந்த கட்டடத்தில்தான் நடக்கும் என விஷால் பேச 400க்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் உறுப்பினர்கள் கை தட்டி வரவேற்றனர்.

702 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன