விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..

117 Views

 

விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..?

தமிழ் சினிமா உலகம் ரஜினி கமல், அஜீத், விஜய்க்கு அடுத்த வியாபார இடத்தில் வைத்திருப்பது நயன்தாரா படங்களை தான்.

அந்தளவுக்கு டிமாண்ட் மார்க்கெட் வியாபார திரைப்பிரபலம் நயன்தாரா.

இவர் நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் 14ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக் குழு முடிவு செய்து இருந்தது.
ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வந்தது.

அதன் அடிப்படையில் படத்தை கொலையுதிர் காலம் படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்.

இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் படத்தின் வியாபாரமும் பெருசாக இல்லை.

டிஸ்ட்ரிபூஷன் முறையில் வாங்கி வெளியிடவும் ஆட்கள் வராததால் தயாரிப்பாளர் தரப்பு கடும் அப்செட் ஆனதாம்.

இதற்கு முக்கியமான காரணம் படத்தின் இயக்குநர் சக்ரி டோலெட்டி,. கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கியவர் தான் இந்த படத்தை இயக்கினார். கமல் படமும், அஜீத் படமும் பெருசாக பேசப்படாததால் நயன்தாரா நடித்தாலும் கொலையுதிர் காலம் விலை போகாமல் சிக்கலில் உள்ளதாம்.

அதனால் தான் பட ரிலீசும் தள்ளிப்போனதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *