
விஜய் சேதுபதிக்கு எப்போதும் கதையை விட கதாபாத்திரம் முக்கியம். சின்ன கெஸ்ட் ரோல் என்றாலும் தன் கதாபாத்திரம் பேசப்படும் என்றால் ஹீரோ என்பதை எல்லாம் மறந்து கேரக்டராகவே மாறிவிடுவார். பல நேரங்களில் அது கை கொடுக்கும் சில நேரங்களில் சர்ச்சையில் சிக்குவார்.
இப்போதும் தெலுங்கில் ஜோடியாக நடித்தாலும் தவறாக தெரியாது என்றாலும், கேரக்டர் கேட்கிறது என்பதற்காக ஹீரோயினுக்கு அப்பா வேஷம் போட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
தமிழ், மலையாள மொழி படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவியின் ’சயீரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்த்தார். அதைத் தொடர்ந்து, ‘உப்பேனா’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோயின் ஆக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் அழகர் சாமியின் குதிரை, பாண்டிய நாடு என சினேகாவின் காதலர்கள் என சில தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கீர்த்தி ஷெட்டியின் அப்பா கேரக்டரில் நடிப்பது சாட்சாத் விஜய் சேதுபதி தான்.
மகள் வயது இருக்கும் நடிகைகளோடு ஜோடியாக நடித்து டூயிட் பாடும் நடிகர்களுக்கு மத்தியில் ஹீரோயினுக்கு அப்பா வேஷம் போட்டிருக்கும் விஜய் சேதுபதி துணிச்சல் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர் பார்க்கிறார்கள்.
