வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

 

மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது.

ஜூலை 8ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்

வேட்பு மனு பரிசீலனை 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனுவை திரும்பப் பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி நாள்.

ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இருந்து கனிமொழி (திமுக), அதிமுகவைச் சேர்ந்த அருணன், மைத்ரேயன், லஷ்மணன், இரத்னவேல் , கம்யூனிஸ்ட் ராஜா(அதிமுக ஆதரவு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது உள்ள சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 3 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற முடியும்.

திமுகவின் 3 இடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு இடமும் மற்ற இரண்டு இடங்களில் திமுகவும் , அதே போல அதிமுக சார்பில் 2 இடங்களிலும், பாமக அன்புமணி ராமதாசுக்கு ஒரு இடமும் கிடைக்கும் என தெரிகிறது.

537 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன