Tag: vaiko

காந்தி உருவத்தை துப்பாக்கியால் சுட்டவர் தேச பக்தர்… நான் தேச துரோகி – என்னத்த சொல்ல வைகோ ஆதங்கம்

காந்தி உருவத்தை துப்பாக்கியால் சுட்டவர் தேச பக்தர்… நான் தேச துரோகி – என்னத்த சொல்ல வைகோ ஆதங்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்! திண்டுக்கல் செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று பகல் 12 மணிக்கு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த விளக்கம் வருமாறு: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு பேசினார். ‘நீங்கள் மாநிலங்கள் அவை உறுப்பினராகச் செல்வதற்கு விருப்பம் இருந்தால், நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால், மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று சொன்னார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துச் சகோதரர்களும் நான் மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும்
மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..! தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூலை 8ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வேட்பு மனு பரிசீலனை 9 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து கனிமொழி (திமுக), அதிமுகவைச் சேர்ந்த அருணன், மைத்ரேயன், லஷ்மணன், இரத்னவேல் , கம்யூனிஸ்ட் ராஜா(அதிமுக ஆதரவு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 3 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற முடியு
தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்! வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்த்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அது வைகோ மகன்  துரை வையாபுரியும் உடன் இருந்தார். வைகோவை  சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:- “திராவிட இயக்கத்தின் சிங்க முகத்தைப் பார்க்க வந்தேன்; போர்வாளை வாழ்த்த வந்தேன். அண்மைக் காலமாக நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தாய்க் கழகத்தோடு, கலைஞர் வளர்த்த பேரியக்கத்தோடு, தளபதியோடு புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தோழமையாக, நட்பாக, அன்பாக, குடும்பமாக இணைந்து கொள்கைக் கூட்டணியை வளர்த்தெடுக்கிறா
தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27-ஆவது பொதுக்குழு   தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு, இன்று 06.03.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* *இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* *தீர்மானம் எண். 1 :* இந்தியத் துணைக்கண்டத்தில் தனித்துவ அடையாளம் கொண்ட, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம், தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்ற சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சி, பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும். இந்தியத் துணைக்கண்டத்திற்கே வழிகாட்டுகின்ற சமூக நீதித் தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி. தியாகராயர்,
பிரதமர் மோடி பதவியில் இருப்பது நாட்டின் சாபக்கேடு – வைகோ குற்றச்சாட்டு

பிரதமர் மோடி பதவியில் இருப்பது நாட்டின் சாபக்கேடு – வைகோ குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இலக்கியப்பீடம் மாத இதழ் ஆசிரியராக இருந்த மறைந்த விக்கிரமனின் 3-ம் ஆண்டு நினைவு விழா, இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார். விழா முடிவில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் 90 கோடி விவசாயிகளின் பிரதிநிதிகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ளனர். 4 மாத காலமாக சாலையில், வெயிலிலும், மழையிலும், பனியிலும் கிடந்த விவசாயிகளை பார்க்க 5 நிமிடம் ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு என்று நினைக்கிறேன் வ
மோடி நல்லா வெயிட் தூக்குவாரோ? – வைகோ

மோடி நல்லா வெயிட் தூக்குவாரோ? – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
10 பேர் சேர்ந்து எதிர்ப்பவரே பலசாலி என்று ரஜினியின் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். நல்லா வெயிட் தூக்குபவர் என்ற அர்த்தத்தில் மோடி பலசாலி என ரஜினி கூறியிருப்பார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கே முழு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்க வேண்டியதில்லை. 7பேரின் விடுதலை விவகாரத்தில் மாநில அரசிடம் முழுமையான வேகம் இல்லை. இவ்வாறு  வைகோ   கூறினார்
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை செய்தியாளர்களிடம் வைகோ சங்கொலி வாரப் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நானும் பத்திரிகையாளர் என்பதால் உங்களிடம் பேசுகிறேன். பத்திரிகைத் துறையை மிரட்டி அச்சுறுத்தி பயமுறுத்தி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பக் கூடிய பிரிவுகளில் வழக்கு போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறித்து விடலாம் என்று ஆளுநர் மாளிகை திட்டமிட்டு சுயமரியாதையை இழந்து விட்ட முதுகெலும்பற்ற அ.தி.மு.க. அரசின் காவல்துறையைப் பயன்படுத்தி நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் ஆளுநரையோ குடியரசுத் தலைவரையோ வேலை செய்ய விடாமல் தடுக்கின்ற சட்டப்பிரிவு 124-இன்படி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பலாம். அந்தப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற ஒரு அதிகாரி டெபுடி செக்ரட
நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கவர்ன