வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

 

விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது.

ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் தெலுங்கு இந்தி என 3 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.

366 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன