வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

 

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

மாமனார் ரஜினிக்கு பேட்ட படம் மூலமாக ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே ரஜினியின் மருமகன் தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தது.

ஆனால் அதற்கு முன் ரஜினி படம் தொடங்கியதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்.

1,154 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன